தோனியின் முதல் பட கதாநாயகன் யார்?- வெளியான புதுத் தகவல்

தோனியின் முதல் பட கதாநாயகன் யார்?- வெளியான புதுத் தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தமிழில் தயாரிக்க இருக்கும் முதல் படத்தின் கதாநாயகன் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தமிழில் படங்கள் தயாரிப்பது குறித்தான அறிவிப்பை நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். தோனி என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் கதையை இதன் நிர்வாக இயக்குநரும் தோனியின் மனைவியுமான சாக்‌ஷி எழுதியுள்ளார்.

கதையின் ஒரு வரியை சாக்‌ஷி சொல்ல இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி திரைக்கதையாக இதனை டெவலப் செய்திருக்கிறார். இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி ஏற்கெனவே, ’அதர்வா- தி ஆர்ஜின்’ என்ற முப்பரிமாண நாவலை எழுதியுள்ளார்.

குடும்ப என்டர்டெயினராக இந்தப் படம் இருக்கும் என தோனி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கதைக் குறித்து கூறப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என மற்ற தென்னிந்திய மொழிகளிலும் படங்கள் எடுப்பதில் தோனி என்டர்டெயின்மென்ட் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், தோனி தயாரிப்பாளராக களம் இறங்கும் இந்தப் புதிய படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றியத் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக கதையின் நாயகனாக ஹரிஷ் கல்யாணும் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகனிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாகச் சொல்லப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் தோனி தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in