ரஜினியின் குட்டிக்கதையில் காகம் யார்? கழுகு யார்?

ரஜினியின் குட்டிக்கதையில் காகம் யார்? கழுகு யார்?
ரஜினியின் குட்டிக்கதையில் காகம் யார்? கழுகு யார்?

’ஜெயிலர்’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சொன்ன குட்டி ஸ்டோரி இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இதன் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. படம் குறித்தும், தனது சினிமா பயணத்தில் சந்தித்த விஷயங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்ட ரஜினிகாந்த் குட்டி கதை ஒன்றை சொல்லி இருக்கிறார். அதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் விவாதம் ஆகி இருக்கிறது. அந்த கதை, ‘காட்டில் சிறிய மிருகங்கள் எப்போதும் பெரிய மிருகங்களை தொல்லை செய்து கொண்டே இருக்கும். உதாரணத்துக்கு சிறிய காகம் எப்போதும் பெரிய கழுகை சீண்டிக் கொண்டே இருக்கும். ஆனால், கழுகு எப்போதுமே அமைதியாகவே இருக்கும். பறக்கும் பொழுது கழுகைப் பார்த்து காகம் உயரமாக பறக்க நினைக்கும். ஆனாலும் காகத்தால் அது முடியாது. ஆனால், கழுகு தன் இறக்கையை கூட ஆட்டாமல் எட்ட முடியாத உயரத்தில் பறந்து கொண்டே இருக்கும்’ என்றார் ரஜினி.

இந்த கதையைச் சொன்னவுடன், ‘நான் காகம், கழுகு என சொன்ன உடன் இவரை தான் சொல்கிறேன் என சமூக வலைதளங்களில் சொல்வார்கள். குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை. நம் வேலையை பார்த்து விட்டு நேராக போய்க் கொண்டே இருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். இதில் கழுகு என தன்னையும், காகம் என நடிகர் விஜய்யையும் தான் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஆரம்பித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in