ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்?

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்?

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுதாக முடிவடைந்து, போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த வருடத் தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. ரஜினியின் அடுத்த படம் அவரது 170-வது திரைப்படமாகும். இத்திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்து வந்தது. கார்த்திக் சுப்பாராஜ், தேசிங்கு பெரியசாமி ஆகியோரின் பெயர்கள் ரஜினியின் அடுத்த திரைப்படத்தின் இயக்குநர் வரிசையில் அடிபட்டாலும், தற்போது ரஜினியின் மருமகனான நடிகர் தனுஷ் ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷ்
தனுஷ்

ஏற்கெனவே, ராஜ்கிரண் நடிப்பில் 'பவர் பாண்டி' என்ற திரைப்படத்தை இயக்கி, தன்னை ஒரு சிறந்த இயக்குநராக நிரூபித்தவர் தனுஷ். தீவிர ரஜினி ரசிகரான தனுஷ், ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்குவார் என்ற செய்தி கிளம்பியதுமே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in