‘துணிவு’ , ‘வாரிசு’ ஜெயித்தது எது? - ரெட் ஜெயின்ட் மூவீஸின் புதிய ட்விட்!

வாரிசு - துணிவு
வாரிசு - துணிவு

கடந்த 11-ம் தேதி பொங்கல் வெளியீடாக வந்த ‘வாரிசு’, ‘துணிவு’ இரண்டில் யார் படம் வெல்லும் என ரசிகர்கள் பெரிய அளவில் முட்டிமோதிக் கொண்டு இருக்கும் நிலையில், ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் இன்று ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளது.

விஜய், அஜித் இருவருமே திரையுலகில் தங்களுக்கென பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் வைத்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பின்பு விஜய், அஜித் இருவரின் படங்களும் ஒரேநாளில் ரிலீஸானதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்துவந்தது. இதனால் இருதரப்பு ரசிகர்களும் போட்டி, போட்டுக்கொண்டு பிளக்ஸ் போர்டு, போஸ்டர் என அமளிதுமளி செய்தனர். அரிதாக சில இடங்களில் மட்டும் விஜய், அஜித் ரசிகர்கள் ஒற்றுமையுடன் தல தளபதி ரசிகர்கள் என பேனர் வைத்திருந்ததையும் பார்க்கமுடிந்தது.

படம் வெளியாகி இன்று முழுதாக 5 வது நாள் என்றாலும், இருதரப்பு ரசிகர்களும் இன்னும்கூட தல, தளபதி மோதலை நிறுத்தவில்லை. யார் படம் வசூலை வாரிக் குவித்துள்ளது எனத் தொடர்ந்து வாதிட்டே வருகின்றனர். இந்நிலையில் ‘துணிவு’, ‘வாரிசு’ இரு படங்களையுமே தமிழகத்தில் வெளியிட்டு இருக்கும் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் இன்று ஒரு ட்வீட் செய்துள்ளது. அதில், “இருபடங்களுமே வெற்றிதான். உங்களுக்கு அருகாமையில் உள்ள திரையரங்குகளில் இரு படங்களையுமே பாருங்கள்!”என நடுநிலையாகப் பதிவிட்டு உள்ளனர். இதை இருதரப்பு ரசிகர்களும் பகிர்ந்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in