முதல் `கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது' எந்த நடிகருக்கு தெரியுமா?

முதல் `கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது' எந்த நடிகருக்கு தெரியுமா?

தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது நடிகர் சிவகுமாருக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழ் அறிஞர கலைஞர் பெயரில் கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது வழங்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் அறிவித்திருந்தார். இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ம் தேதி இந்த விருது வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் சாமிநாதன், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ம் தேதி விருத்தாளர்களுக்கு ரூ.10 லட்சம் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்படும் என்று சொன்ன நிலையில் மேற்படி முதல் விருது நடிகர் சிவகுமாருக்கு வழங்க உதயநிதி சிபாரிசு செய்திருக்கிறாராம்.

இந்த விசயத்தை தங்கம் தென்னரசு, சிவகுமாரிடம் சொன்ன நிலையில்தான் அண்மையில் ஒரு விழாவில் “முத்தமிழறிஞர் கலைஞர் உயிரோடு இருந்தால் அவரின் பாதத்தை தொட்டு வணங்குவேன். ஏனெனில் அவர்தான் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தையும், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலையும் வைத்தவர்’ என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

Related Stories

No stories found.