
"நல்ல நண்பர்களை மட்டும் இழந்துவிடாதீர்கள். இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது. எங்கு போய் நட்பை தேடுவேன்” என்று இயக்குநர் செல்வராகவன் உருக்கமாக கூறியுள்ளார்.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் செல்வராகன், பின்னர், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார். நடிப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் இவர் பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து, சாணிக் காயிதம் மற்றும் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள பகாசூரன் படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் செல்வராகவன் அடிக்கடி வாழ்க்கை தத்துவங்கள் தொடர்பான பதிவுகளை இடுவது வழக்கம். இந்தநிலையில், செல்வராகவன் தற்போது பதிவிட்டுள்ள பதிவு ஒன்று ட்விட்டரில் வைரலாகி உள்ளது. அதில், “அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்துவிடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது. எங்கு போய் நட்பை தேடுவேன்” என உருக்கமாக கூறியுள்ளார்.