அஜித்தின் 61-வது படத்தின் அப்டேட் எங்கே?- மீண்டும் தெறிக்கவிடும் ரசிகர்கள்

அஜித்தின் 61-வது படத்தின் அப்டேட் எங்கே?- மீண்டும் தெறிக்கவிடும் ரசிகர்கள்

`வலிமை' அப்டேட்டை தொடர்ந்து தற்போது அஜித்தின் 61-வது படத்தின் அப்டேட் எங்கே என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் அவரின் 61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்தப் படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. மேலும் தமிழகத்தில் தற்போது அதிக படங்களை விநியோகம் செய்து வரும் முன்னணி நிறுவனம் அந்தப் படத்தை வெளியிடுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளதாகவும் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்துவரும் வாரிசு படமும் வெளியாகவுள்ளது. இதனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் - விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இறுதியாக அஜித்தின் வீரம் - விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், அஜித்தின் 61-வது படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிடுவதில்லை என்று அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். படத்தின் அப்டேட்டை விட அஜித் வெளிநாடு சென்றது, பைக்கில் சுற்றுலா செல்வது போன்ற விஷயங்கள்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் விஜய் நடிக்கும் 'வாரிசு' படம் பற்றிய அப்டேட் மற்றும் விஜய் அடுத்து நடிக்க உள்ள அவரது 67-வது படம் பற்றிய அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், அஜித்தின் 61-வது படத்தின் அப்டேட் வெளிவராததால் '#WakeUpBoneyKapoor” என ஹேஷ் டேக் தற்போது அவரது ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகிறார்கள். `வலிமை' அப்டேட்டை தொடர்ந்து தற்போது அஜித்தின் 61-வது படத்தின் அப்டேட்டும் எதிரொலிக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in