பிரபாகரனின் பேராண்மை எங்கே... நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே?

கவிஞர் வைரமுத்து ட்வீட்
பிரபாகரனின் பேராண்மை எங்கே... நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே?

"தாய்மண்ணில் மரிப்பேன் என்ற பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே... நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே" என்று கவிஞர் வைரமுத்து வினா எழுப்பியுள்ளார்.

இலங்கையில் அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதல் உச்சமடைந்துள்ள நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்ச. இதன் பின்னரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ராஜபக்ச, அவரது சகோதரர் பசில் ராஜபக்ச ஆகியோரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பயத்தில் தனது இருப்பிடத்திலிருந்து வெளியேறிய ராஜபக்ச, தனது குடும்பத்தினருடன் தப்பித்து தமிழர்கள் அதிகம் வாழும் திரிகோண மலையில் உள்ள கடற்படை தளத்தில் ஒளிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் அவர், வெளிநாட்டுக்கு தப்பி செல்ல இருப்பதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ராஜபக்சே நிலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

நான்கு பக்கம்

மரணம் சூழ்ந்தபோதும்

'தாயகம் பிரியேன்

தாய்மண்ணில் மரிப்பேன்' என்ற

பிரபாகரத் தமிழனின்

பேராண்மை எங்கே...

ஊர் கொந்தளித்த

ஒரே மாதத்தில்

நாடு கடக்கத் துடிக்கும்

ராஜபக்ச எங்கே...

சர்வதேச சமூகமே!

இப்போதேனும்

தமிழன் வீரத்திற்குத்

தலைவணங்கு

இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories

No stories found.