`வாரிசு' படத்தில் குஷ்பு எங்கே?’- படக்குழுவை டேக் செய்து கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

`வாரிசு' படத்தில் குஷ்பு எங்கே?’- படக்குழுவை டேக் செய்து கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!
Castro

நடிகை குஷ்பு ‘வாரிசு’ படத்தில் எங்கே? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் ஆகியோரது ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ படங்கள் ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு இவர்களது படங்கள் ஒரேநாளில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். ’வாரிசு’ படத்தில் நடிகர்கள் ராஷ்மிகா மந்தானா, ஷ்யாம், பிரகாஷ்ராஜ், பிரபு, சங்கீதா உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். பட வெளியீட்டிற்கு முன்பு நடிகை குஷ்பு, விஜய் மற்றும் ராஷ்மிகாவுடன் செல்ஃபி எடுக்கும்படியான புகைப்படம் படத்தில் இருந்து வெளியாகி வைரலானது.

பல வருடங்களுக்குப் பிறகு விஜய் படத்தில் குஷ்பு என ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். ஆனால், படத்தில் நடிகை குஷ்பு தொடர்பான காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. இதனால், ரசிகர்கள் ‘’வாரிசு’ படத்தில் குஷ்பு எங்கே?’ எனப் படக்குழுவை டேக் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த நீக்கப்பட்ட காட்சிகளை யூடியூப் தளத்திலாவது வெளியிட வேண்டும் எனவும் படக்குழுவிடம் சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

தமிழில் ‘வாரிசு’ திரைப்படம் 11-ம் தேதி வெளியானது. தெலுங்கில் வருகிற 14-ம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in