`தளபதி 67’ படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது?

`தளபதி 67’ படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது?

’தளபதி 67’ படப்பிடிப்பு எப்போது தொடங்க இருக்கிறது என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தன்னுடைய 66-வது படமான ‘வாரிசு’ படத்தில் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 67-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான திரைக்கதை பணியில் ஈடுபட்டு இருப்பதால் சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருப்பதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் ‘தளபதி67’ எப்போது தொடங்க இருக்கிறது என்பது குறித்தான தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதன்படி இந்த வருடம் நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே அதில் கதாநாயகனுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில், இந்த படத்தில் நடிக்க வைப்பதற்காக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மற்றும் பிரித்விராஜ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் ஆயுத பூஜையை ஒட்டி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிகை சமந்தாவும் விஜய்க்கு ஜோடியாக கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து த்ரிஷாவும் நடிக்க இருப்பதாகவும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் முன்பு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in