சிம்புவின் `பத்துதல’ எப்போது ரிலீஸ்?

சிம்புவின் `பத்துதல’ எப்போது ரிலீஸ்?

நடிகர் சிம்புவின் ‘பத்துதல’ படம் வெளியாவது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிலம்பரசனின் ‘பத்துதல’ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம் டிசம்பர் கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தை ஒட்டி படம் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இப்போது படம் வெளியாவது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் மாதம் வெளியாவதில் இருந்து தள்ளிப்போன பிறகு, பிப்ரவரி மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால், ஜனவரியில் வெளியாகும் அடுத்தடுத்த பெரிய படங்கள் காரணமாக பிப்ரவரி மாதத்தில் இருந்து தள்ளிப்போனது ‘பத்துதல’. இதனை அடுத்து தற்போது மார்ச் மாத இறுதியில் படம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒபிலி கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் கன்னட படமான ‘மஃப்டி’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், கெளதம் கார்த்திக், டீஜே, கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் சிலம்பரசன் ஒப்பந்தமாகியுள்ள அடுத்தடுத்த புதிய படங்கள் குறித்தான எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in