நடிகர் விஷாலின் `லத்தி’ எப்போது ரிலீஸ்?

நடிகர் விஷாலின் `லத்தி’ எப்போது ரிலீஸ்?

நடிகர் விஷாலின் ‘லத்தி’ திரைப்படம் எப்போது வெளியாக இருக்கிறது என்பது குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.

’வீரமே வாகை சூடும்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஷால் தற்போது ‘லத்தி’ படத்தை வெளியிட இருக்கிறார். படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகியுள்ள நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டிற்கான நிகழ்வு நடந்தது. இதனை அடுத்து அடுத்த வாரத்தில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை தினத்தை ஒட்டி படம் வெளியாகும் எனத் தெரிகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகரும் தயாரிப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ‘லத்தி’ படத்தை வெளியிட நடிகர் விஷால் தன்னை அணுகியது குறித்தும் பகிர்ந்திருந்தார்.

டிசம்பர் மாதம் 22-ம் தேதி படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம். சுனைனா படத்தின் கதாநாயகியாக நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in