`பயம் மட்டுமே இருக்கிறது; திருமண உறவுக்குள் நுழைய யோசிக்கிறேன்'- மனம் திறந்தார் ஸ்ருதிஹாசன்

`பயம் மட்டுமே இருக்கிறது; திருமண உறவுக்குள் நுழைய யோசிக்கிறேன்'- மனம் திறந்தார் ஸ்ருதிஹாசன்

ஒரே வீட்டில் தனது காதலருடன் வசித்து வந்தாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? என்பது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். படப்பிடிப்புகள் இருக்கிறது என்றால் மட்டும் சென்னை, ஹைதராபாத் வந்து போவார். முன்பு வேறொருவருடன் காதலில் இருந்தவர் அந்த காதல் முறிவுக்கு பிறகு இப்போது டாட்டூ கலைஞரான சாந்தனு என்பவருடன் லிவிங் டூ கெதரில் தன்னுடைய மும்பை வீட்டில் வசித்து வருகிறார். ‘ஒரே வீட்டில் இருந்தும் ஏன் இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஸ்ருதி பதிலளித்துள்ளார்.

‘நான் எங்கு சென்றாலும் எனது திருமணம் குறித்தான கேள்விகள் வந்து கொண்டே தான் இருக்கும். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், திருமணம் என்ற வார்த்தையில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை. பயம் மட்டுமே இருக்கிறது. அதனாலேயே, அந்த உறவுக்குள் நுழைய நான் அதிகம் யோசித்து வருகிறேன். எனது அம்மா, அப்பாவின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்து விட்டதன் காரணமாக நான் இப்படி யோசிக்கிறேன் என்று அர்த்தமில்லை.

என்னுடைய வாழ்க்கையில் சாந்தனு உள்ளே வந்ததும் நிறைய விஷயங்கள் மாறி இருக்கிறது. ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். எங்கள் இரண்டு பேருக்கும் இடையில் நிறைய விஷயங்கள் ஒத்து போகிறது. என் அம்மா, அப்பா பிரிவிற்கு பிறகு மும்பைக்கு வந்தேன். கிட்டத்தட்ட 12 வருடங்களாக இங்கு வசித்து வருகிறேன். இந்தியில் சில படங்கள் நடித்திருந்தாலும் இன்னும் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். மும்பை எனக்கு இரண்டாவது வீடு” என பேசியுள்ளார் ஸ்ருதிஹாசன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in