
நடிகர் சூர்யா நடிப்பில் வரவிருக்கும் ‘சூர்யா42’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
’ஜெய்பீம்’, ‘விக்ரம்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் சூர்யா தற்போது ‘சிறுத்த’ சிவா இயக்கத்தில் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இந்தப் படத்தில் சுமார் ஐந்து கெட்டப்புகளில் சூர்யா நடிக்கிறார். 10 மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளதாகவும் தெரிகிறது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இந்தப் படத்தின் ப்ரீ பிசினஸ் கிட்டத்தட்ட 500 கோடியை எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பீரியாடிக் ட்ராமாவாக அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தத் திரைப்படம் 3டி-யிலும் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டைட்டில் டீசரை அடுத்த மாதம் 14ம் தேதி அதாவது, தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழாவும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழு தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.