`சூர்யா 42’ அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு எப்போது?

`சூர்யா 42’ அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு எப்போது?

நடிகர் சூர்யாவின் 42-வது படத்தின் அடுத்த ஷெட்யூல் ஆரம்பிப்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

‘சிறுத்த’ சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, திஷா பட்டாணி உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘சூர்யா 42’. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சென்னை, கோவா ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. வரலாற்றுப் படமாக உருவாகி வரக்கூடிய இந்தப் படத்தில் நடிகர் சூர்யா ஐந்து வேடங்களில் நடிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. 3டி-யில் உருவாகக்கூடிய நடிகர் சூர்யாவின் முதல் திரைப்படம் இது.

சென்னை, கோவாவை அடுத்து தற்போது படக்குழு படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றுள்ளது. அங்குள்ள வனப்பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

60 நாட்கள் நடக்க இருக்கும் இதன் படப்பிடிப்பின் பெரும்பகுதி இங்கு படமாக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இலங்கை பகுதிக்கான படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. மொத்தப் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மார்ச் மாதத்தில் முடிய இருக்கிறது.

சூர்யாவின் சினிமா பயணத்தில் அதிக பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரக்கூடியத் திரைப்படம் இது. கிட்டத்தட்ட 10 மொழிகளில் இந்தப் படம் பான் இந்தியா அளவில் வெளியிட இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in