`சூர்யா 42’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு எப்போது?

`சூர்யா 42’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு எப்போது?

நடிகர் சூர்யாவின் 42-வது படத்தின் முதல் பார்வை வெளியீடு குறித்தத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

’விக்ரம்’ படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா தற்போது தன்னுடைய 42-வது படத்தில் பிஸியாக இருக்கிறார். இயக்குநர் சிவாவுடன் சூர்யா இணைந்திருக்கும் இந்தத் திரைப்படம் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. வரலாற்றுப் படமான இதை பத்து மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் இதன் கோவா ஷெட்யூல் முடிவடைந்து தீபாவளிக்காக இடைவேளை எடுத்திருக்கிறது படக்குழு. படத்தின் அறிவிப்பை வித்தியாசமான முறையில் மோஷன் போஸ்டருடன் வெளியிட்ட படக்குழு தற்போது படத்தின் முதல் பார்வையையும் வித்தியாசமான முறையில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறார்கள்.

‘சூர்யா 42’ படத்தின் முதல் பார்வை இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகை அல்லது அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதேபோல, கோவா ஷெட்யூலுக்கு அடுத்து சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

இதைத் தொடர்ந்து மீண்டும் கோவாவில் படப்பிடிப்பு நடக்கும். பீரியட் ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாகி வரும் இந்தக் கதைக்கு வெளிநாட்டிலும் படப்பிடிப்பு நடத்த இயக்குநர் ‘சிறுத்த’ சிவா திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் திஷா பட்டானி. படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத்.

நடிகர் சூர்யா எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ கதையில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் அதற்கான முன்னோட்டமாகவே ‘சிறுத்த’ சிவாவுடனான இந்தச் சரித்திரப் படம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.        

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in