நடிகையுடன் சிம்பு திருமணம் எப்போது?- பரபரக்கும் புது தகவல்

நடிகையுடன் சிம்பு திருமணம் எப்போது?- பரபரக்கும் புது தகவல்

நடிகர் சிம்புவின் திருமணம் எப்போது என்பது தெரியவந்துள்ளது.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ’மாநாடு’ படம் சூப்பர் ஹிட்டானது. இதை வெங்கட்பிரபு இயக்கி இருந்தார். தனது, வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். இதையடுத்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ’வெந்து தணிந்தது காடு’, கிருஷ்ணா இயக்கும் ’பத்து தல’ படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.

சிம்பு, நிதி அகர்வால்
சிம்பு, நிதி அகர்வால்

நடிகர் சிம்புவும் ’ஈஸ்வரன்’ படத்தில் அவருடன் நடித்த நிதி அகர்வாலும் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. சிம்பு வீட்டில், நிதி அகர்வால் தங்கி இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இந்தக் காதலை இருவரும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் இவர்கள் திருமணம் செய்துக் கொள்ள இருப்பது உறுதி என்று கூறப்படுகிறது.

நடிகை நிதி அகர்வால், பவன் கல்யாண் ஜோடியாக ’ஹரிஹர வீரமல்லு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். கிருஷ் இயக்கியுள்ள இதை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். இந்தப் படம் ஏப்ரல் மாத இறுதியில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இது ரிலீஸ் ஆன ஒன்றிரண்டு மாதத்தில் சிம்பு - நிதி அகர்வால் திருமணம் நடக்க இருப்பதாக பரபரப்பாகப் பேசப்படுகிறது.

ஜெயம் ரவியுடன் 'பூமி' படத்தில் நடித்துள்ள நடிகை நிதி அகர்வால், ’முன்னா மைக்கேல்’ என்ற இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in