’வில் ஸ்மித் செய்தது கடும் குற்றம், 6 மாத சிறை கிடைக்கலாம்’

வில் ஸ்மித், அவர் மனைவி ஜடா பிங்கெட்,கிறிஸ் ராக்
வில் ஸ்மித், அவர் மனைவி ஜடா பிங்கெட்,கிறிஸ் ராக்

வில் ஸ்மித் செய்தது கடுமையான குற்றம் என்றும் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டால், ஆறு மாதம் சிறைத் தண்டனை கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடந்தது. இதில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கிறிஸ் ராக், நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட்-டின் மொட்டை தலை குறித்து கிண்டலாகப் பேசினார். 1997-ம் ஆண்டு வெளியான ‘ஜி.ஐ ஜேன்’ என்ற படத்தில் டெமி மூர் மொட்டையடித்து நடித்திருப்பார். அதை ஒப்பிட்டுப் பேசினார் ராக். ஜடா பிங்கெட், அலோபீசியா என்ற ஒருவகை முடி உதிர்தல் நோயால் பாதிக்கப்பட்டதால் மொட்டை அடித்துள்ளார்.

கிறிஸ் ராக்கை அறையும் வில் ஸ்மித்
கிறிஸ் ராக்கை அறையும் வில் ஸ்மித்

இந்த நிலையில், மனைவி பற்றி கிண்டலாக, கிறிஸ் ராக் பேசியதை தாங்கிக் கொள்ளாத வில் ஸ்மித், மேடையேறிச் சென்று, அவர் கன்னத்தில் வேகமாக அறைந்தார். ’’என் மனைவியின் பெயரை இனி உச்சரிக்காதே” என்றும் கத்தினார் ஸ்மித். “நகைச்சுவைக்காகவே அப்படிச் சொன்னேன்” என்றார் கிறிஸ் ராக். இதனால் அரங்கில் இருந்த திரை பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர். விருது பெற்றதும், இந்தச் சம்பவத்திற்காக. வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில், விழாவில் பாதுக்காப்பிற்கு வந்திருந்த போலீஸார், கிறிஸ் ராக்கிடம் இந்தச் சம்பவம் குறித்து பேசினார். அவர், புகார் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் வில் ஸ்மித் செய்தது கடுமையான குற்றம் என்று சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்தது. கிறிஸ் ராக் புகார் கொடுத்தால், வில் ஸ்மித்துக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும் ரூ.76 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவர் புகார் கொடுக்க இன்னும் 6 மாத காலம் அவகாசம் இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in