நாளை வெளியாகும் ‘பீஸ்ட்’டுக்கு நல்வாழ்த்து சொல்லும் எஸ்.ஏ.சி!

நாளை வெளியாகும் ‘பீஸ்ட்’டுக்கு நல்வாழ்த்து சொல்லும் எஸ்.ஏ.சி!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் நேரடியாக வெளியாகிறது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக இதில் நடிக்கிறார். செல்வராகவன், ரெடின் கிங்க்ஸ்லே ஆகியோரும் நடிக்கின்றன. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையில் ‘அரபிக்குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்களும் ‘பீஸ்ட் தீம் சாங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

கடந்த வாரம் படத்தின் டீஸர் வெளியான நிலையில் படம் குறித்தான எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். மேலும், இந்த படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா இல்லாததால் பத்து வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துள்ளார். விஜய்யை ‘பீஸ்ட்’ இயக்குநர் நெல்சனே நேர்காணல் செய்துள்ளார்.

இந்தப் பேட்டியில் நெல்சனின் பல கேள்விகளுக்கு விஜய் விரிவான பதிலையே கூறியிருந்தார். அதில், ‘குடும்பத்தில் அப்பா என்பவர் எப்படிப்பட்டவர் என நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்வியை நெல்சன் கேட்டார். அதற்கு விஜய், ‘ஒரு மரத்தை நாம் பார்க்கும் அதன் பூக்கள் மட்டும்தான் நம் கண்களுக்கு தெரியும். வேரின் உழைப்பை யாரும் பெரிதாகக் கவனிப்பதில்லை. அப்பா என்பவர் அதுபோலத்தான். அப்பாவுக்கும் கடவுளுக்கும் உள்ள வித்தியாசம் - கடவுளை நாம் பார்க்க முடியாது. ஆனால், அப்பாவைப் பார்க்கலாம்’ என்று பதிலளித்திருந்தார்.

Silverscreen Inc.

சில மாதங்களுக்கு முன்பு விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. விஜய்யின் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக அவரது ஒப்புதல் இல்லாமலேயே பதிவு செய்ய எஸ்.ஏ.சி முயன்றதால் தந்தை - மகனுக்கு இடையிலான மனஸ்தாபம் பொதுவெளிக்கு வந்தது. இந்தச் சூழலில் நெல்சனின் பேட்டியில் தந்தையைப் போற்றி விஜய் பதிலளித்தது கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில், ‘பீஸ்ட்’ திரைப்படம் நாளை வெளியாவதை ஒட்டி தனது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ ஒன்றை எஸ்.ஏ.சி வெளியிட்டுள்ளார். அதில் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்திருப்பதோடு, படத்தைக் கொண்டாடக் காத்திருக்கும் ரசிகர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சி.

Related Stories

No stories found.