'ஜனநாயகத்தில் மன்னராட்சி சின்னம் எதற்கு?’: செங்கோல் குறித்து கேள்வி எழுப்பும் நடிகை கஸ்தூரி!

 நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி'ஜனநாயகத்தில் மன்னராட்சி சின்னம் எதற்கு?’: செங்கோல் குறித்து கேள்வி எழுப்பும் நடிகை கஸ்தூரி!

செங்கோல் தமிழர்களின் பிரத்யேக அடையாளம் கிடையாது; எல்லா நாடுகளிலும் உள்ளது என்றும் ஜனநாயகத்தில் மன்னராட்சியின் சின்னம் எதற்கு என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். இந்த புதிய கட்டிடத்தில் திருவாவடுதுறை செங்கோல் வைக்கப்படவுள்ளது. இந்த செங்கோல் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கான முழு விளக்கத்தையும் நேற்று அளித்தார்.

இந்தநிலையில், நடிகை கஸ்தூரி, ஜனநாயகத்தில் மன்னராட்சியைக் குறிக்கும் சின்னமான செங்கோல் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளர். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’செங்கோலுன்னு சொன்னாலே ஓங்கோலுக்கு எரியுதே ஏன் ? உயிர் போகும் பிரச்சினையை விட்டுபுட்டு இந்த புண்ணாக்கை விவாதிச்சுட்டு இருக்கோம். ஒரு வேளை அதான் task ஓ? என்னை கேட்டா செங்கோலோ பேனாவோ, எல்லாமே அரசியல்வாதிகளின் தனிப்பட்ட தம்பட்டம். மக்களுக்கு இதெல்லாமே தேவையில்லாத ஆணிதான்.

செங்கோல் உலகம் முழுக்க உண்டு. ஆங்கிலேயர், ஆப்பிரிக்கர், ஆரியர், எல்லா மன்னரும் பயன்படுத்தினார்கள். தமிழரின் பிரத்தியேக அடையாளம் இல்லை. அப்புறம் ஜனநாயகத்தில் மன்னராட்சி சின்னம் எதற்கு'’ என பதிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாஜவினர், நடிகை கஸ்தூரியின் பதிவிற்கு பதிலடிக் கொடுத்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in