தனுஷ் நடிக்கும் படத்தின் கதை என்ன?- அருண் மாதேஸ்வரன் சொல்லும் புதுத் தகவல்

தனுஷ் நடிக்கும் படத்தின் கதை என்ன?- அருண் மாதேஸ்வரன் சொல்லும் புதுத் தகவல்

'மாறன்' பட வெளியீட்டிற்குப் பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் 'திருச்சிற்றம்பலம்', 'தி கிரே மேன்', 'வாத்தி' உள்ளிட்ட படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. இதில் 'திருச்சிற்றம்பலம்', 'தி கிரே மேன்' படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தி கிரே மேன் திரைப்படம் ஜூலை மாதம் இறுதியில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. அதே சமயத்தில் 'வாத்தி' படப்பிடிப்பும் தீவிரமாக நடந்து வருகிறது. செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடக்கின்றன.

இந்நிலையில் நடிகர் தனுஷ் அடுத்து 'ராக்கி', 'சாணிக்காயிதம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது இந்த படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தலைப்பு 'கேப்டன் மில்லர்' என தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் இதன் கதை 1930-களில் நடக்கும் ஆக் ஷன் அட்வென்சர் த்ரில்லர் கதையாக இருக்கும் எனவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமில்லாமல் தான் இயக்கிய படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பட்ஜெட்டில், அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையிலும் பான் இந்தியா படமாக இந்த கதை உருவாக்கப்பட உள்ளது என தெரிவித்திருக்கிறார். டார்க் ஹ்யூமர் கலந்த கதையாகவும் இருக்கும் எனவும் இந்த படத்தின் ப்ரீ புரொடக் ஷன் பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக ப்ரியங்கா அருளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம். இது மட்டுமில்லாமல் நடிகர் தனுஷின் பிறந்தநாள் ஜூலை 29-ம் தேதி. இதனையொட்டி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' திரைப்படமும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைப்பில் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் பிரியங்கா, பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படம் வெளியாவது குறித்து தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in