`தி கிரேமேன்' படத்தில் தனுஷின் கதாபாத்திரம் என்ன?- சீக்ரெட்டை உடைத்த ரூஸோ சகோதரர்கள்!

`தி கிரேமேன்' படத்தில் தனுஷின் கதாபாத்திரம் என்ன?- சீக்ரெட்டை உடைத்த ரூஸோ சகோதரர்கள்!

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான 'தி கிரேமேன்' படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியாகி இருக்கிறது.

தமிழில் தற்போது 'நானே வருவேன்', 'திருச்சிற்றம்பலம்' தமிழ் மற்றும் தெலுங்கில் 'வாத்தி' ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ள நடிகர் தனுஷ் ஹாலிவுட்டிலும் இந்த கிரேமேன் படம் மூலமாக அடியெடுத்து வைக்கிறார். 'கேப்டன் அமெரிக்கா- சிவில் வார்', 'அவெஞ்சர்ஸ்- இன்ஃபினிட்டி வார்', 'அவெஞ்சர்ஸ்- எண்ட் கேம்' ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளனர். எழுத்தாளர் மார்க் கிரினேவின் 'தி கிரேமேன்' நாவலை இந்த படம் தழுவியுள்ளது.

வருகிற ஜூலை மாத இறுதியில் படம் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தனுஷ் தவிர்த்து ரியான் கோஸ்லிங், அனா டி அர்மாஸ், கிரிஸ் எவன்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கடந்த வருட தொடக்கத்தில் கலிபோர்னியாவில் இதன் படப்பிடிப்பு தொடங்கி ஜூலையில் முடிவடைந்தது. அமெரிக்கா, செக் குடியரசு, பராகுவே உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்தது. படத்திற்கான பொருட்செலவு கிட்டத்தட்ட 200 பில்லியன் யுஎஸ் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரெய்லர் வெளியானதும், நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளம் நேற்று இரவு ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஸ்பேஸ் ஒன்றை நடத்தியது. அதில் படத்தின் இயக்குநர்களான ரூஸோ சகோதரர்கள் கலந்து கொண்டு படம் குறித்தும் நடிகர் தனுஷின் கதாபாத்திரம் பற்றியும் பேசி இருக்கிறார்கள். "தனுஷ் படத்தில் ஒரு கொலையாளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு படத்தில் இரண்டு வலுவான ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன. நாங்கள் இருவரும் தனுஷின் மிகப்பெரிய ரசிகர்கள். அவருக்காகவே இந்த கதாபாத்திரத்தை உருவாக்கினோம்.

அவருக்கு சிறந்த நடிப்பு திறனும் கேமரா பற்றிய புரிதலும் இருக்கிறது. அவருடைய கதாபாத்திரம் கிளாசிக்கான, தனித்துவமான, நகைச்சுவையான அதே நேரத்தில் ஒரு `கெட்டவன்' என்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in