ஆந்திர அரசியலில் களம் இறங்குகிறேனா?: என்ன சொல்கிறார் நடிகர் விஷால்

ஆந்திர அரசியலில் களம் இறங்குகிறேனா?: என்ன சொல்கிறார் நடிகர் விஷால்

ஆந்திர அரசியலில் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து களம் இறங்க இருப்பதாக வந்துள்ள செய்திகளை நடிகர் விஷால் மறுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவிற்கு எதிராக குப்பம் தொகுதியில் நடிகர் விஷாலை களமிறக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகர் விஷால். இந்த செய்திகள் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் அவர் தன்னுடைய சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: ஆந்திரபிரதேச அரசியலில் நான் களம் இறங்க போவதாகவும், குப்பம் தொகுதியில் நான் வேட்பாளராக நான் போட்டியிட போவதாகவும் வந்த வதந்திகளைக் கேள்விபட்டேன். இந்த செய்திகளை முற்றிலுமாக நான் மறுக்கிறேன்.

இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது, இது குறித்து யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவும் இல்லை. எப்படி இது போன்ற செய்திகள் பரவுகிறது என்பதும் எனக்குப் புரியவில்லை. அடுத்தடுத்து நான் படங்களில் தான் நடித்து கொண்டிருக்கிறேன். அதனால் ஆந்திரபிரதேச அரசியலில் களம் இறங்கவோ, சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போட்டியிடவோ எந்த எண்ணமும் இல்லை என தெளிவுபடுத்தியிருக்கிறார் விஷால்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in