`இந்த 2 நிகழ்வுகளுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?'- நடிகை சாய்பல்லவி திடீர் கொந்தளிப்பு

`இந்த 2 நிகழ்வுகளுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?'- நடிகை சாய்பல்லவி திடீர் கொந்தளிப்பு

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தில் இந்து பண்டிதர்கள் கொல்லப்படுவது போன்று காட்சி வைக்கப்பட்டது குறித்தும் அண்மையில் இஸ்லாமியர் ஒருவர் தாக்கப்படுவது குறித்தும் பிரபல நடிகை சாய் பல்லவி கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீரில் 1990-களில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் குறித்து `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற பெயரில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பாஜக ஆளும் குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் வரிச்சலுகை அளித்துள்ளன. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்த படத்தை பார்த்து வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதேநேரத்தில் இந்த படத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

இந்த பிரச்சினை அடங்கியிருக்கும் நிலையில், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தில் இந்து பண்டிதர்கள் கொல்லப்படுவது குறித்தும் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை சாய் பல்லவி.

இது குறித்து அவர் கூறுகையில், "காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் இந்து பண்டிதர்கள் கொல்லப்படுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டது. அண்மையில் இஸ்லாமியர் ஒருவர் மாட்டைக் கொண்டு சென்றபோது அவரை ஒருசிலர் ஜெய் ஸ்ரீராம் என சொல்லுமாறு துன்புறுத்தி உள்ளனர். இந்த 2 நிகழ்வுகளுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in