இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியதற்கான காரணம் என்ன? - யுவன் சங்கர் ராஜா விளக்கம்!

விஜய்- யுவன் ஷங்கர் ராஜா
விஜய்- யுவன் ஷங்கர் ராஜா

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென இன்று முடங்கியதற்கான காரணம் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'GOAT ' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ சமீபத்தில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்பாடல் ஒரே நாளில் அதிக லைக், பார்வைகளை கடந்து சாதனைப் படைத்தது.

யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா

ஆனாலும், சுமாரான பாடலை கொடுத்ததாக பலரும் இணையத்தில் யுவன் ஷங்கர் ராஜாவை மீம்ஸ்கள் மூலமாக கிண்டல் அடித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென டி ஆக்டிவேட் செய்யப்பட்டது. விசில் போடு பாடலுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததால்தான் யுவனின் இன்ஸ்டாகிராம் பக்கம் டிஆக்டிவேட் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது.

ஆனால் தற்போது இது தொடர்பாக யுவன் சங்கர் ராஜா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனது இன்ஸ்டாகிராம் டிஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் சரிசெய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in