சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ ப்ரீ- பிசினஸ் விவரம் என்ன?

‘மாவீரன்’
‘மாவீரன்’ சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ ப்ரீ- பிசினஸ் விவரம் என்ன?

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் ப்ரீ-பிசினஸ் விவரம் வெளியாகியுள்ளது.

'ப்ரின்ஸ்’ படத்திற்குப் பிறகு மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். அதிதி ஷங்கர் இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதன் முதல் பாடலான ’சீன் ஆ சீன் ஆ’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய இதன் படப்பிடிப்பு விரைவில் இறுதிக்கட்டத்தை நெருங்க இருக்கிறது என்பதையும் படக்குழு தெரிவித்தது. இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது. இப்போது ‘மாவீரன்’ படத்திற்கான ப்ரீ- பிசினஸ் குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்தப் படத்தின் ப்ரீ- பிசினஸ் 83 கோடி ரூபாய் வரை முடிக்கப்பட்டுள்ளது. ஓடிடி உரிமத்தை அமேசானும், ஆடியோ உரிமத்தை சரிகமப-வும் பெற்றுள்ளது என சொல்லப்படுகிறது. ’மாவீரன்’ படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in