'தீ தளபதி' பாடலுக்கு சிம்புவின் சம்பளம் எவ்வளவு?

'தீ தளபதி' பாடலுக்கு சிம்புவின் சம்பளம் எவ்வளவு?

’தீ தளபதி’ பாடல் பாடியதற்கு நடிகர் சிம்புவின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்தான விவரம் வெளியாகியுள்ளது.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தில் இருந்து இரண்டாம் பாடலான ‘தீ தளபதி’ கடந்த 4-ம் தேதி வெளியானது. இந்தப் பாடலை நடிகர் சிலம்பரசன் பாடி இருந்தார். பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நிலையில், ‘தீ தளபதி’ பாடலைப் பாடியதற்காக நடிகர் சிலம்பரசன் எந்தவிதமான சம்பளமும் பெற்றுக் கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் மீதுள்ள அன்பு காரணமாகவே சிம்பு சம்பளம் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் சொல்லப்படுகிறது. மேலும், ‘வாரிசு’ படத்தில் நடிகர் சிம்பு விஜய்யுடன் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். இவர்களோடு இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்ற தகவல் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீடு விழா இந்த மாதம் இறுதி வாரத்தில் சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் புதுவருடத்தை ஒட்டி படத்தின் டீசரும் வெளியாக இருக்கிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in