நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் திட்டம் என்ன?

நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் திட்டம் என்ன?

நடிகை நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் திட்டம் என்ன என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா தன்னுடைய 38-வது பிறந்தநாளை இந்த மாதம் 28-ம் தேதி கொண்டாட இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு, தன்னுடைய குழந்தைகளுடன் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் ஸ்பெஷலாக எதாவது பர்த்டே பார்ட்டி என்பதை ஏற்பாடு செய்வார்.

அந்த வகையில், இந்த வருடம் திருமணம் மற்றும் குழந்தைகள் என்ற விஷயம் இருப்பதால் நயன்தாரா பிறந்தநாளை எப்படி கொண்டாடப் போகிறார்கள் என்பது பற்றிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.

விக்னேஷ் சிவன் பிறந்தநாளை நயன்தாரா துபாயில் கொண்டாடினார். ஆனால், இப்போது குழந்தைகள் இருப்பதால் எளிமையாக இந்த வருடம் நயன்தாரா பிறந்தநாளை வீட்டிலேயே நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. குழந்தைகள் வளரும் வரை அதிகம் வெளியில் பயணத்திட்டங்களை இந்த தம்பதி தவிர்த்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து, ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது நடிகர் அஜித்தின் 62-வது படத்திற்கான திரைக்கதை பணியில் கவனம் செலுத்தி வருகிறார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்கும் ‘ஜவான்’ படத்திற்கான இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் விரைவில் நயன்தாரா கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in