
சூர்யாவின் நடிப்பில் பாலாவின் இயக்கத்தில் உருவாகும் ‘ வணங்கான் ‘ படத்தின் ஷூட்டிங் மீண்டும் எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் சூர்யா மற்றும் `சிறுத்தை' சிவாவின் `சூர்யா42' படத்தின் படப்பிடிப்பு இப்போது தீவிரமாக கோவாவில் நடந்து வருகிறது. எனவே பாலாவின் படம் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தீவிரமாக நடைபெற்ற பாலா - சூர்யா கூட்டணியின் ‘வணங்கான்’ பட ஷூட்டிங் திடீரென நின்றது. பாலா முதலாவதாக தயார் செய்திருந்த ஸ்கிரிப்ட் அதிக உடல் உழைப்பைக் கொண்டதாக இருந்ததாம், அதனால் ரொம்பவே சிரமப்பட்டுள்ளார் சூர்யா. அதை மாற்றப் போய் அதன் தொடர்ச்சியாக கதையிலும் சில மாற்றங்கள் செய்துவிட்டாராம் பாலா. முந்தைய கதையில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் ஸ்கிரிப்டை வேறு மாதிரியாக மாற்றிவிட்டாராம் பாலா. இதனால் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டிருந்த சூர்யாவும் இப்போது ரிலாக்ஸ் ஆகிவிட்டார் என சொல்லப்படுகிறது.
பாலாவின் படத்திற்கு பின்னர் வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பதற்கான அத்தனை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இப்படத்துக்காக சூர்யா செல்லமாக வளர்த்து வரும் காளையும், இப்போது அவரின் பக்கத்தில் கயிறே இல்லாமல் நடந்து வரும் அளவுக்கு பாசமாகப் பழக ஆரம்பித்துவிட்டதாக படக்குழுவினர் சொல்கின்றனர்.