இன்னொருவர் செய்ததை நான் ஏன் செய்ய வேண்டும்? - மகேஷ்பாபு கேள்வி!

நடிகர் மகேஷ்பாபு
நடிகர் மகேஷ்பாபு

இன்னொருவர் செய்ததை நான் ஏன் செய்ய வேண்டும் என மகேஷ்பாபு சொன்ன ஸ்டேட்மெண்ட் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மகேஷ்பாபு இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரக்கூடிய நிலையில், ரீமேக் படங்களில் தான் ஏன் நடிப்பதில்லை என்று மகேஷ் பாபு சொன்ன ஸ்டேட்மெண்ட் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் பேசி இருப்பதாவது, ‘நீங்கள் ஏன் ரீமேக் படங்களில் நடிக்கவில்லை என்று என்னைக் கேட்கிறார்கள். ஏற்கனவே வெளியான ஒரு படத்தை மீண்டும் செய்வதில் என்ன புதிய விஷயம் இருக்கப் போகிறது. அந்த ஹீரோ செய்ததையா மீண்டும் நான் செய்ய வேண்டும். முதலில் அதை நீங்கள் செய்வீர்களா?

நடிகர் மகேஷ்பாபு
நடிகர் மகேஷ்பாபு

அப்படி இருக்கும்போது அதை நான் எப்படி செய்வது? அதனால்தான், அதனை நான் தவிர்க்கிறேன். நான் ரீமேக்குக்கு எதிரானவன் என பல முறை சொல்லியிருக்கிறேன். சில சமயங்களில் ஒரிஜினல் வெர்ஷனில் நடித்த ஹீரோவை இமிட்டேட் செய்கிறார் என்ற கருத்து எழும். எதற்காக இதுபோன்ற விஷயங்களில் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்றுதான் ரீமேக்கிலிருந்து ஒதுங்கியே இருக்கிறேன்’ என்று தெரிவித்து இருக்கிறார் மகேஷ் பாபு.

சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவி மற்ற மொழிகளில் வெளியாகும் பல நல்ல படங்கள் ரசிகர்களுக்குப் போய் சேர வேண்டும் என்பதற்காகவே ரீமேக் படங்களில் நடிப்பதாக ‘போலோ ஷங்கர்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் வெளியீட்டில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in