உக்ரைனில் சிக்கிக் கொண்டாரா? பிரபல நடிகை விளக்கம்

உக்ரைனில் சிக்கிக் கொண்டாரா? பிரபல நடிகை விளக்கம்

உக்ரைனில் சிக்கிக்கொண்டதாகவும் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும் கூறப்படும் தகவல்களுக்கு நடிகை பிரியா மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகை பிரியா மோகன். இவர் தமிழில் ’பிறப்பு’ என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகை பூர்ணிமா இந்திரஜித்தின் சகோதரியான பிரியா மோகன், யூடியூப் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரும் இவர் கணவரும் நடிகருமான நிஹல் பிள்ளையும், சமீபத்தில் உக்ரைன் சென்றதாகவும் ரஷ்ய படையெடுப்பு காரணமாக, அங்கு சிக்கிக் கொண்டதாகவும் கேரளா திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாயின.

பிரியா மோகன்
பிரியா மோகன்

ரசிகர்கள், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நடிகை பிரியா மோகன், தான் உக்ரைனில் இல்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளார்.

’கடந்த ஆகஸ்ட் மாதம் குடும்பத்துடன் உக்ரைன் சென்றிருந்தேன். அப்போது அங்கு எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் இப்போது வெளியிட்டு, அங்கு சிக்கியுள்ளதாக சிலர் கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது. நான் இப்போது குடும்பத்துடன் கொச்சியில்தான் இருக்கிறேன். உக்ரைனில் இல்லை. தயவு செய்து தவறான தகவல்களை பகிர வேண்டாம்’ என்று பிரியா மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.