பிரபல ஹீரோவை திருமணம் செய்கிறாரா ராஷ்மிகா?

ராஷ்மிகா
ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா, பிரபல நடிகரைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.

கன்னட சினிமாவில் இருந்து தெலுங்குக்கு வந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதாகோவிந்தம், டியர் காம்ரேட் படங்கள் ஹிட்டாயின. அப்போதே இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாயின. ஆனால், இதை இருவரும் மறுத்துவந்தனர். தொடர்ந்து ராஷ்மிகா நடித்த படங்கள் ஹிட்டாக, ராசியான நடிகையானார். தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா

அவர் நடித்து சமீபத்தில் வெளியான புஷ்பா படம், அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில், அவர் இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். ’மிஷன் மஜ்னு’ அமிதாப் பச்சனுடன் ’குட்பை’ஆகிய இந்திப் படங்களில் நடித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா

இதற்கிடையே, நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகாவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் இந்த வருட இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை ராஷ்மிகாவோ, விஜய் தேவரகொண்டாவோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

சமீபத்தில் ராஷ்மிகா அளித்த பேட்டியில், “திருமணம் பற்றி பேசுவதற்கு எனக்கு போதிய வயது வரவில்லை. அதனால் அதைப் பற்றி இன்னும் யோசிக்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in