சாலையில் மேல் சட்டையைக் கிழித்து ரகளை: தட்டிக்கேட்ட பெண் போலீஸைக் கடித்து வைத்த நடிகையால் பரபரப்பு

சாலையில்  மேல் சட்டையைக் கிழித்து ரகளை: தட்டிக்கேட்ட பெண் போலீஸைக் கடித்து வைத்த நடிகையால் பரபரப்பு

பெண் போலீஸின் கையைக் கடித்த நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருபவர் ககோலி விஸ்வாஸ் (28). வெப் சீரிஸ் நடிகையான இவர், படப்பிடிப்புக்காக கடந்த வெள்ளிக்கிழமை புனே சென்றார். அங்கு, வட்கான்ஷெரி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஆன்லைன் மூலம் அறை முன்பதிவு செய்திருந்தார். அங்கு சென்று பார்த்தபோது, அவருக்கு அறை வசதியாக இல்லை என்பது தெரியவந்தது.

இதனால் ஓட்டல் நிர்வாகத்திடம் தனது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டார். ஆனால், அவர்கள் பணத்தைத் திரும்ப தர மறுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஓட்டல் எதிரே சாலைக்கு வந்த ககோலி விஸ்வாஸ், அங்கு நின்று பிரச்சினை செய்ததாகக் கூறப்படுகிறது. அங்கு சென்றவர்களுக்கும் அவர் தொல்லைக் கொடுத்தாராம்.

இதைக் கேள்விபட்டு அங்கு வந்த புனே மகளிர் போலீஸார், சாலையில் இருந்து ஓரமாக அழைத்துச் சென்று சமாதானம் செய்து வைக்க முயன்றனர். அப்போது கோபமான நடிகை ககோலி, திடீரென தனது மேல் சட்டையை கிழித்தார். பிறகு பர்வீன் ஷேக் என்ற பெண் போலீஸைத் தாக்கிவிட்டு, அவர் கைவிரலைக் கடித்தார். அவருடைய மூக்குக் கண்ணாடியையும் சேதப்படுத்தினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பர்வீன் ஷேக், இதுகுறித்து புகார் செய்ததை அடுத்து, நடிகை ககோலி கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் கையைக் கடித்ததால், நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in