‘மயில்சாமியின் குழந்தைகளை அரவணைப்போம்’ -நடிகர் சங்கத் தலைவர் நாசர் உறுதி!

மயில்சாமிக்கு இறுதி மரியாதை செலுத்தும் நாசர், கார்த்தி
மயில்சாமிக்கு இறுதி மரியாதை செலுத்தும் நாசர், கார்த்தி

நடிகர் மயில்சாமியின் எதிர்பாரா மறைவை அடுத்து, நிர்க்கதியாகி இருக்கும் அவரது குடும்பத்துக்கு உதவும் வகையில் நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாசர் உறுதி ஒன்றை அளித்திருக்கிறார்.

சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முழுக்க விழித்திருந்து பக்தி பரவசத்துடன் வலம் வந்த நடிகர் மயில்சாமி, அதிகாலையில் வீடு திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர், பிரபலங்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் நேரில் சென்று மயில்சாமிக்கு இறுதி மரியாதை தெரிவித்தனர். பின்னர் நாசர் தெரிவிக்கையில், “மயில்சாமி எவருக்கும் தீங்கு நினைக்காதவர். தன்னுடைய தகுதிக்கு மீறி உதவிகளை செய்பவர். தப்பு என்று தெரிந்தால் முகத்துக்கு நேராக சொல்பவர். அவருடைய ஸ்தானத்திலிருந்து அவரது குழந்தைகளை அரவணைப்போம்” என்று உறுதி தெரிவித்திருக்கிறார்.

நாசர் தெரிவித்தது போலவே, நடிகர் மயில்சாமி தனது வருமானம், குடும்பம் குறித்தெல்லாம் அதிகம் யோசிக்காது, உதவி தேவைப்படும் இடத்தில் எல்லாம் தன்னால் முடிந்ததை செய்திருப்பதாகவே பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த நல்ல ஆன்மா சாந்தியடையும் வகையில் அவர் சார்ந்த துறையினரே, மயில்சாமியின் குழந்தைகளை அரவணைக்க முன்வந்திருப்பது பொதுவெளியில் வரவேற்பு பெற்றிருக்கிறது. நல்ல மனிதரின் மறைவுக்கு செலுத்தும் உண்மையான இறுதி அஞ்சலியாகவும் இது பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in