நடிகர் தனுஷூக்கு நாளைக்கு பதில் அனுப்புவோம்: மகன் என உரிமை கொண்டாடிய தம்பதியின் வக்கீல் அதிரடி!

நடிகர் தனுஷூக்கு நாளைக்கு பதில் அனுப்புவோம்: மகன் என உரிமை கொண்டாடிய தம்பதியின் வக்கீல் அதிரடி!

10 கோடி ரூபாய் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என நடிகர் தனுஷ் அனுப்பிய நோட்டீசுக்கு நாளை பதில் அனுப்புவோம் என்று மகன் என உரிமை கொண்டாடிய தம்பதியின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என கூறி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மேலும், தனுஷ் தங்கள் மகன் தான் என ஊடகங்களில் பேட்டியும் அளித்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.

இந்த நிலையில் தங்களைக் கொலை செய்ய இயக்குநர் கஸ்தூரிராஜா முயற்சித்ததாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்று விட்டதாகவும் குற்றச்சாட்டுகளைக் கூறி கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுசுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக கதிரேசன் தம்பதியர் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் 10 கோடி ரூபாய் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் கஸ்தூரிராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் மூன்று நாட்களுக்கு முன் அனுப்பப்பட்டது.

இந்த மனு குறித்து கதிரேசன் தம்பதியரின் வழக்கறிஞர் டைட்டஸ் கூறுகையில், “ நடிகர் தனுஷ், இயக்குநர் கஸ்தூரி ராஜா சார்பில் அனுப்பப்பட்ட வழக்கறிஞர் நோட்டீஸ் கிடைத்தது. அதற்கு நாளை பதில் அனுப்புவோம்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in