`காசேதான் கடவுளடா' படத்தை வெளியிட மாட்டோம்'- உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம்!

காசேதான் கடவுளடா
காசேதான் கடவுளடா `காசேதான் கடவுளடா' படத்தை வெளியிட மாட்டோம்'- உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம்!
Updated on
1 min read

நடிகர் யோகிபாபு நடித்த `காசேதான் கடவுளடா' திரைப்படத்தை தற்போது வெளியிடமாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.

சென்னை திருவான்மியூரை சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறது. சென்னை தி.நகரை சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் தன்னை அணுகி நடிகர் யோகி பாபு, மிர்ச்சி சிவா, நடிகை ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிக்கும் `காசேதான் கடவுளடா' என்கின்ற திரைப்படத்தை எடுக்க ரூபாய் 1 கோடியே 75 லட்சம் கொடுப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கடந்த 2021-ம் ஆண்டு போடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பு தன்னிடமிருந்து வாங்கிய பணத்தை திருப்பி அளிப்பதாகவும் ராஜ்மோகன் உறுதி அளித்ததின் அடிப்படையில் 1 கோடி 75 லட்சம் ரூபாயை பல்வேறு தவணை மூலமாக வழங்கினேன். இந்த ஒப்பந்த விதிகளை மீறி ஓடிடி மற்றும் திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. இதனால் தனக்கு பெரிய நிதி இழப்பு ஏற்படும். பணத்தை திருப்பிக் கொடுக்கும் வகையில் `காசேதான் கடவுளடா' திரைப்படத்தை வெளியிட இடைகால தடை விதிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு இன்று விசாரணை வந்தபோது எதிர்மனுதாரரான ராஜ்மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரருக்கு ஒப்பந்தத்தின்படி குறிப்பிட்ட பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மீதி பணத்தை கொடுக்கும் வரை ஓடிடி மட்டும் திரையரங்களில் வெளியிட மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 2-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in