நடிகை நமீதாவுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள்: வைரல் வீடியோ

நடிகை நமீதாவுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள்: வைரல் வீடியோ

நடிகை நமீதாவுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதன் வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2004-ல் வெளியான `எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார் நடிகை நமீதா. அதன் பின்னர் விஜய், சத்யராஜ், அர்ஜுன், பார்த்திபன், சுந்தர் சி, சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார் நமீதா. இதனிடையே, கடந்த 2017-ம்ம் ஆண்டில் தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார் நமீதா. இதையடுத்து தனது பிறந்த நாளில் தான் கர்ப்பம் தரித்தது குறித்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள நமீதா, "இந்த நல்ல சந்தர்ப்பத்தில், எங்கள் மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். உங்கள் ஆசிகளும் அன்பும் அவர்களுக்கு என்றும் இருக்கும் என்று நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in