`உன்னை எப்பொழுதும் நான் தேடுகிறேன் மோனு'- தங்கை நினைவுநாளில் சிம்ரன் உருக்கம்

`உன்னை எப்பொழுதும் நான் தேடுகிறேன் மோனு'- தங்கை நினைவுநாளில் சிம்ரன் உருக்கம்

தங்கை மோனல் நினைவு நாளான இன்று உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார் நடிகை சிம்ரன்.

`பார்வை ஒன்றே போதுமே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மோனல். பிரபல நடிகை சிம்ரனின் தங்கையான இவர், கடந்த 2002-ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டது தமிழ் திரையுலகத்தை அதிர்ச்சியடைய வைத்தது. இவருக்கு சிம்ரன் மற்றும் ஜோதி என்ற இரண்டு சகோதரிகளும், சுமித் என்ற சகோதரரும் இருக்கின்றனர். தனது அறிமுக படமான `பத்ரி' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமானார் மோனல். ஆனால் தமிழில் இவரது முதல் வெளியீடாக குணாலுடன் இணைந்து நடித்த `பார்வை ஒன்றே போதுமே' வெளியானது.

நடிகை மோனல் இறந்து இன்றுடன் 20 வருடங்கள் கடந்துவிட்டன. அவரது நினைவுநாளையொட்டி சகோதரி நடிகை சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், "நீ என்னுடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாம் இருவரும் மனதால் ஒன்றிணைந்துதான் இருக்கின்றோம். 20 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், இன்னும் உன்னுடைய ஒரு பாதி என்னுள்தான் இருக்கிறது. உன்னை எப்பொழுதும் நான் தேடுகிறேன் மோனு என்றென்றும்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.