வீட்டிலிருந்த பல லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம் திருட்டு: நடிகை பார்வதி நாயர் அதிர்ச்சி

வீட்டிலிருந்த பல லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம் திருட்டு: நடிகை பார்வதி நாயர் அதிர்ச்சி

சினிமா நடிகை பார்வதி நாயர் வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மலையள நடிகையான பார்வதி நாயர் தமிழில் `என்னை அறிந்தால்', `நிமிர்ந்து நில்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர், சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். இந்நிலையில், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் இன்று புகார் அளித்துள்ளார். அதில், தனது வீட்டில் இரண்டு வருடமாக வேலை செய்து வந்த பணியாளர் ஒருவர் இன்று அதிக விலை 6 லட்சம் மதிப்பிலான கை கடிகாரம், 3 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், 50 ஆயிரம் மதிப்புடைய மடிக்கணினி, செல்போன் உள்பட பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுள்ளதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை வீட்டில் கைக்கடிகாரம், மடிக்கணினி திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in