`இப்போது அல்ல, எப்போதும் சொல்லமாட்டேன்'- நடிகர் ஜெய்யுடன் காதலா கேள்விக்கு நடிகை அஞ்சலி பதில்!

`இப்போது அல்ல, எப்போதும் சொல்லமாட்டேன்'- நடிகர் ஜெய்யுடன் காதலா கேள்விக்கு நடிகை அஞ்சலி பதில்!

நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்தேனா என்பது பற்றி நடிகை அஞ்சலி மனம் திறந்துள்ளார்.

’கற்றது தமிழ்’, ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் அஞ்சலி. தற்போது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் இவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிய பாடல் ரசிகர்களிடையே வைரலானது. இந்த நிலையில், அவர் நடித்துள்ள ‘ஃபால்’ என்ற தமிழ் இணையத்தொடர் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனை ஒட்டி நடிகை அஞ்சலி சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் நடிகர் ஜெய்யுடனான காதல்தான் அவரது மார்க்கெட் தமிழில் குறைய காரணமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

நடிகை அஞ்சலி
நடிகை அஞ்சலி

இதற்கு அஞ்சலி, ‘நான் செய்யாத ஒரு விஷயத்தை செய்ததாக கூறும்போது அதற்கு நான் ஏன் பதிலளிக்க வேண்டும்? இப்படி ஒரு செய்தி வெளியான போதே அதற்கு பதில் சொல்லவில்லை. இப்போது ஏன் சொல்ல வேண்டும்? இப்போது மட்டுமல்ல, எப்போதும் இதற்கான விடை சொல்ல மாட்டேன். எனக்கு சினிமாவில் ஏராளமான நண்பர்கள் உள்ளனர். அதில் ஜெய்யும் ஒருவர்’ என கூறியுள்ளார் அஞ்சலி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in