இந்தப் புள்ளையையும் இப்டி மாத்தீட்டீங்களே!

வருத்தப்படும் ப்ரியா வாரியர் ரசிகர்கள்
இந்தப் புள்ளையையும் இப்டி மாத்தீட்டீங்களே!
ப்ரியா வாரியர்

ஒற்றைக் கண்ணசைவில் ‘ஒரு அடார் லவ்’ படத்தின் மூலமாக இளசுகளின் பல்ஸ் ரேட்டையும் எகிறச் செய்த மலையாள வரவு ப்ரியா வாரியர், தரை லோக்கலுக்கு இறங்கி அடிப்பது அவரது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

கரோனா காலத்தில் பெரும்பாலான நடிகைகள் சமூக வலைதளங்களில் தங்களின் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களையும், அரைகுறை ஆடைகளோடு எடுத்த வீடியோக்களையும் அப்லோட் செய்வதையே முழு நேர கொள்கையாக வைத்திருந்தனர்.

சமூக வலைதளங்களை சூடாக்கிய புகைப்படங்களும், வீடியோக்களும் ஒரு ரகம் என்றால், பிக்பாஸ் ஜூலி, ப்ரியா வாரியர் போன்றவர்கள் அடுத்த ரகம்.

ஆண் நண்பர் ஒருவருடன் சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்டி ப்ரியா வாரியர் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தான் இப்போது வலைதளத்தின் வைரல்.

திடீர் பப்ளிசிட்டியால் இந்தி, கன்னடம், தெலுங்கு என அடுத்தடுத்து படங்களில் பிசியாகி இருக்கும் ப்ரியா, நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து முடித்துள்ளார். க்ளாமரில் இறங்கியடிப்பது தான் வாய்ப்புகள் வளர அமைவதற்கான டோக்கன் என்று யாரோ சொல்லியிருப்பார்கள் போல. ப்ரியாவின் இன்ஸ்ட்ரா பக்கத்தில் பதிவேற்றபொபடு புகைப்படங்கள் அத்தனையும் அப்படியான ரகத்தில் தான் இருக்கின்றன.

தனது நண்பருடன்...
தனது நண்பருடன்...

சிக்கென் உடையணிந்து கொண்டு வளைந்து, நெளிந்து ஆண் நண்பருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பார்த்து, அட பாவமே... கடைசியில இந்த புள்ளையையும் இப்படி மாத்திட்டீங்களே என்று அவரது ரசிகர்கள் அங்கலாய்த்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in