நான்கு ஹீரோயின்கள் நடிக்கும் 'வார்டு 126'!

நான்கு ஹீரோயின்கள் நடிக்கும் 'வார்டு 126'!

பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள ’வார்டு 126’ படத்தில் நான்கு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

எஸ்எஸ்பி டாக்கீஸ் தயாரிப்பில் செல்வகுமார் செல்லப்பாண்டியன் இயக்கும் படம், 'வார்டு 126'. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் விதமாக, ரொமான்டிக் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. இதில் ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நாயகர்களாக மைக்கேல் தங்கதுரை மற்றும் ஜிஷ்ணு மேனன் நடிக்கின்றனர்.

முக்கிய வேடத்தில் சோனியா அகர்வால், ஸ்ரீமன் நடித்துள்ளனர். எஸ்கே சுரேஷ் குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ளும் இந்தப் படத்திற்கு வருண் சுனில் இசையமைத்துள்ளார். இவர் துல்கர் சல்மான், ரிது வர்மா நடித்த’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்கு இசையமைத்தவர்.

பற்றி இயக்குநர் செல்வகுமார் செல்லப்பாண்டியன் கூறும்போது, ’’ஒவ்வொரு துறையிலும் இருண்ட பக்கங்கள் இருக்கிறது. அதே போல் நான் ஐடி துறையில் பணியாற்றிய போது என் கண் முன்னே நடந்த, அதன் இருண்ட பக்கங்களின் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியுள்ளேன். வார்டு-126 என்ற தலைப்பு, ஒரு முடிவின் தொடக்கமாக இருக்கும்.

இதில் நடித்துள்ள நாயகிகள் அனைவருக்குமே சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தை தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

ஆக்சன் ரியாக்சன் ஜெனீஷ், படத்தை இம்மாத இறுதியில் ரிலீஸ் செய்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in