தமிழில் முன்னணித் தொகுப்பாளினியான விஜே அர்ச்சனா, தன் கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்திருந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் ஊடகத்துறையில் முன்னணித் தொகுப்பாளராக இருப்பவர் விஜே அர்ச்சனா. தொலைக்காட்சியில் மட்டுமல்லாது, ரேடியோவிலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ளப் பேட்டியில், தன் கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்ததாக அர்ச்சனா வெளிப்படையாகத் தெரிவித்து இருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், ’இதுவரை நான் வெளியில் சொல்லாத ஒரு விஷயம் இது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னாள் நானும் என் கணவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்து, அதற்கான ஆவணங்களை எல்லாம் தயார் செய்து விட்டோம்.
இதைத் தெரிந்து கொண்ட எங்கள் மகள் சாரா, ‘நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியுமா என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்’ என்றாள். அதன் பிறகே, நாங்கள் இந்த விவாகரத்து முடிவை கைவிட்டு 20 வருடங்களுக்கு முன்பு எப்படி காதலித்தோமோ அப்படி மீண்டும் காதலிக்க ஆரம்பித்து இருக்கிறோம். என் கணவர் கப்பற்படையில் வேலை செய்கிறார். எங்கள் இரண்டு பேருக்கும் வெவ்வேறு துறைகள் என்பதால், பல சமயங்களில் எங்களுக்குள் கருத்து மோதல்கள் வரும். அதுவும் விவாகரத்து முடிவு நாங்கள் எடுக்க ஒரு காரணம். ஆனால், அந்த முடிவை கைவிட்டு இப்போது மீண்டும் காதலிக்கத் தொடங்கியுள்ளோம்’ என கூறியுள்ளார் அர்ச்சனா.