
’இந்தியன்2’ படத்தில் நடிகர் விவேக்கின் காட்சிகள் மாற்றப்பட்டதா என்பது குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலரது நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்2’ திரைப்படம் உருவாகி வருகிறது.
இதன் படப்பிடிப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கினாலும் கோவிட் உள்ளிட்ட சில காரணங்களால் அது தடைப்பட்டு நின்று தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழக்க நேர்ந்தது.
இதனை அடுத்து, ‘இந்தியன் 2’ படத்தில் அவரது காட்சிகள் இடம்பெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அவருக்குப் பதிலாக வேறு நடிகர்கள் இதில் ரீப்பிளேஸ் செய்யப்படுவார்கள் எனவும் தகவல் வந்தது. ஆனால், இந்த செய்திகளை படக்குழு தற்போது முற்றிலுமாக மறுத்துள்ளது.
இதுவரை பார்க்காத நடிகர் விவேக்கை இந்தப் படத்தில் பார்க்கலாம் எனவும், விவேக் நடித்துள்ள காட்சிகள் மாற்றப்படவோ அல்லது அவருக்குப் பதிலாக வேறு யாரையும் நடிக்க வைக்கவோ இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. இதில் விவேக் காட்சிகளுக்கு யார் டப்பிங் கொடுத்துள்ளார்கள் என்பதும் தெரியவில்லை. படத்தில் ஆறு வில்லன்கள் இருக்கும் நிலையில் க்ளைமாக்ஸ் காட்சிகள் தனுஷ்கோடியில் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது சென்னையில் நடந்து வரும் இந்தப் படத்தினை லைகா தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.