தளபதி 66: விஜய்க்கு வில்லனாகிறாரா விவேக் ஓபராய்?

தளபதி 66: விஜய்க்கு வில்லனாகிறாரா விவேக் ஓபராய்?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் என பலரும் நடித்திருக்கும் படம் ‘பீஸ்ட்’. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்துவருகின்றன. அடுத்த மாதம் திரைப்படம் திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், ‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு விஜய்யின் 66-வது படம் தெலுங்கு - தமிழ் என இரு மொழிகளில் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தை இயக்குநர் வம்சி இயக்குகிறார். இதன் மூலம் விஜய் முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

விஜய்யின் ஆரம்ப காலத் திரைப்படங்களைப் போல, குடும்பங்களுக்குப் பிடித்த வகையிலான கதையாக ‘தளபதி 66’ இருக்கும் என இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தனது முந்தைய பேட்டிகளில் தெரிவித்தார்.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. ஏற்கனவே, ‘பீஸ்ட்’ படத்தில் பூஜா ஹெக்டேவா அல்லது ராஷ்மிகாவா என கதாநாயகி தேர்வில் இவர்களது பெயர்கள் அடிபட்ட போது இறுதியாக பூஜா தேர்வானார். இந்த நிலையில் ‘தளபதி 66’ படத்தில் ராஷ்மிகா நடிக்க உள்ளார்.

விவேக் ஓபராய்
விவேக் ஓபராய்

இந்நிலையில், கதைப்படி விஜய்க்கு வலிமையான வில்லன் தேவைப்படுவதால் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே நடிகர் அஜித்தின் ‘விவேகம்’ படம் மூலமாக வில்லனாக கோலிவுட்டில் அறிமுகமானவர் விவேக் ஓபராய்.

அந்த வகையில் ‘தளபதி 66’ படத்திலும் இவர் நடிப்பது உறுதியாகி விட்டால் தமிழில் விவேக் ஓபராய்க்கு இது இரண்டாவது படம் ஆகும். இது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in