மகாபாரதத்தின் பாதிப்பில் 3 புதிய திரைப்படங்கள்... விவேக் அக்னிஹோத்ரியின் அடுத்த அதிரடி!

விவேக் அக்னிஹோத்ரியின் பர்வா
விவேக் அக்னிஹோத்ரியின் பர்வா

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநரான விவேக் அக்னிஹோத்ரி, அடுத்த படைப்பாக மகாபாரதத்தின் பாதிப்பிலிருந்து 3 பாகங்களிலான திரைப்படங்களை அடுத்தடுத்து எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

காஷ்மீர் பிராந்தியத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மண்ணின் மக்களான பண்டிட்டுகளின் துயரத்தை பேசும் படைப்பு என்ற முன்னறிவிப்போடு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வெளியானது. பிரதமர் மோடியில் தொடங்கி இந்துத்துவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இந்த திரைப்படம் பெற்றது. விருதுகளோடு வசூலையும் வாரிக் குவித்தது.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்
தி காஷ்மீர் ஃபைல்ஸ்

இதன் தொடர்ச்சியாக ’தி வாக்ஸின் வார்’ திரைப்படத்தை விவேக் அக்னிஹோத்ரி எடுத்தார். கொரோனா காலத்தின் பின்னணியில் தடுப்பூசி மற்றும் தேசத்தின் பிரதாபங்களை கலந்துகட்டிய அந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி படுதோல்வியடைந்தது. எனவே ’காஷ்மீர் ஃபைல்ஸ்’ பாணியில் அவர் எடுப்பதாக திட்டமிட்டிருந்த பல்வேறு ஃபைல்ஸ் திரைப்படங்களை ஒதுக்கி வைத்தார். ஆன்மிகத்தின் பக்கம் அமைதியாக கரையொதுங்கி இருக்கிறார்.

தி வாக்ஸின் வார்
தி வாக்ஸின் வார்

இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தின் பாதிப்பில் 3 பாகங்களில் விரியும் ’பர்வா’ திரைப்பட வரிசையை உருவாக்கப்போவதாக இன்று அவர் அறிவித்திருக்கிறார். எச்.எல்.பைரப்பா எழுதிய பர்வா என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு அதே தலைப்பிலான 3 பாக திரைப்படங்கள் உருவாக இருக்கின்றன. மகாபாரத்தின் பாதிப்பில் உருவானது பைரப்பாவின் பர்வா புதினம்.

பர்வா
பர்வா

இது தொடர்பாக விவேக் அக்னிஹோத்ரி வெளியிட்ட பதிவு ஒன்றில் ‘பெரும் அறிவிப்பு: மகாபாரதம் சரித்திரமா அல்லது புராணமா? நாங்கள் பத்ம பூஷன் டாக்டர். எஸ்.எல். பைரப்பாவின் நவீன கிளாசிக் படைப்பான: ’பர்வா - தர்மத்தின் காவிய’த்தை வழங்குவதற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பர்வாவை 'மாஸ்டர் பீஸ்களின் மாஸ்டர் பீஸ்' என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது’ என்று தெரிவித்திருக்கிறார். இவரது புதிய அறிவிப்புக்கு ஆதரவும், எதிர்ப்புமாக வழக்கம்போல கலவையான கமெண்டுகள் எழுந்திருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in