விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்களின் ‘அமைச்சர்’

விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்களின் ‘அமைச்சர்’
’அமைச்சர்’- ஜெய் ஆகாஷ்

விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் இணைந்து ’அமைச்சர்’ என்ற படத்தை உருவாக்கியுள்ளனர்.

ஸ்ரீ அம்மன் கலை அறிவியல் கல்லூரி விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள், ’அமைச்சர்’ என்றத் திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். படத்தை எல்.முத்துகுமாரசாமி இயக்கியுள்ளார். வே .இ. ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக, தேவிகா நடிக்கிறார். நடிகர் விஜயகுமார், விளையாட்டு வீரர் சௌந்தரராஜன், காவல் துறை முன்னாள் அதிகாரிகள் எஸ்.டி.ராஜன்,ஏ.பி.சேகர் , உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான அருணாச்சலம், புஷ்பவதி உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஜெய் ஆகாஷ், விஜயகுமார்
ஜெய் ஆகாஷ், விஜயகுமார்

படத்தில் ஒளிப்பதிவு , வசனம், தொழில்நுட்ப உதவிகள் என்று விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்களே தொழிற்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். தேவா இசையமைத்துள்ளார். நற்பணிகள் செய்யும் கதாபாத்திரமாக ’அமைச்சர்’ கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. கரை வேஷ்டி கட்டிய ஓர் அமைச்சரின் காதல் கதைதான் படமாம்.

படப்பிடிப்பு குற்றாலம், திருத்தணி, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு தணிக்கைக்குழு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் 29-ம் தேதி வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.