விஷ்ணு விஷால் படத்துக்கு மலேசியா, குவைத்தில் திடீர் தடை?

எஃப்ஐஆர்
எஃப்ஐஆர்

விஷ்ணு விஷால் நடித்துள்ள எஃப்.ஐ.ஆர் படத்துக்கு மலேசியா, குவைத், கத்தாரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம், 'எஃப்.ஐ.ஆர்'. இதில், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மனு ஆனந்த் இயக்கியுள்ளார். அஸ்வத் இசை அமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் நாளை (பிப். 11) தியேட்டர்களில் வெளியாகிறது. இதை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

இந்தப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், போலீஸாரால் தேடப்படும் அபு பக்கர் அப்துல்லா என்ற இஸ்லாமிய இளைஞராக நடித்துள்ளார். அவரைத் தேடும் போலீஸ் அதிகாரியாக கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். தீவிரவாதம் குறித்துப் பேசும் இந்தப் படத்தின் டிரைலர் வரவேற்பைப் பெற்றிருந்தன.

இந்நிலையில் இந்தப் படம் மலேசியா, குவைத், கத்தார் ஆகிய இஸ்லாமிய நாடுகளில் வெளியாகவில்லை. அந்தந்த நாட்டு தணிக்கைத் துறைகள் இந்தப் படத்துக்கு சான்றிதழ் தர மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தியுள்ள நடிகர் விஷ்ணு விஷால், ட்விட்டரில் அந்த நாடுகளின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in