என்.டி.ஆர், தலைவி, 83... இப்போ லலித் மோடி!

என்.டி.ஆர், தலைவி, 83... இப்போ லலித் மோடி!

என்.டி.ஆர், தலைவி, 83 படங்களை அடுத்து, ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி பற்றி படம் தயாரிக்க இருப்பதாக தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்துரி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் துணைத் தலைவர் லலித் மோடி. தொழிலதிபரான இவர், இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) மூளையாகச் செயல்பட்டவர். ஐபிஎல்-லின் நிறுவனர் மற்றும் முதல் சேர்மன். ஐபிஎல் இந்தளவுக்கு புகழ்பெற காரணமாக இருந்தவரும் இவர்தான்.

நிதி முறைகேடுகளுக்காக 2013-ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, இங்கிலாந்தில் வசித்து வருகிறார். ஐபிஎல் மற்றும் லலித் மோடி பற்றி, பிரபல விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜூம்தார், ‘மாவரிக் கமிஷனர்: தி ஐபிஎல்- லலித் மோடி சாகா’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி இருந்தார். இது மே மாதம் வெளியாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் அடிப்படையில், லலித் மோடி பற்றிய திரைப்படம் உருவாகிறது.

இந்தப் படத்தை, விஷ்ணு இந்தூரி தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே என்.டி.ராமாராவின் பயோபிக்கான ’என்.டி.ஆர்’, ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான ’தலைவி’, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றிப் பெற்ற கதையை கொண்டு, 83 ஆகிய படங்களை தயாரித்தவர்.

அவர் கூறும்போது, ``ஐபிஎல், கிரிக்கெட் உலகையே மாற்றிவிட்டது. விளையாட்டுப் பத்திரிகையாளர் போரியா மஜூம்தார் எழுதிய புத்தகத்தில் ஐபிஎல் உருவாக்கம் மற்றும் லலித் மோடி பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதைத் திரைப்படமாக எடுக்க இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

விஷ்ணுவர்தன் இந்தூரி
விஷ்ணுவர்தன் இந்தூரி

போரியா மஜூம்தார் கூறும்போது, லலித் மோடி கிரிக்கெட்டின் எதிர்காலம் நோக்கிய கனவை, ஒரு பார்வையை அனைவரிடமும் புரிய வைக்க முயன்றார். ஐபிஎல் எப்படி நடந்தது? அதன் பின் கதைகள் என்ன, லலித் மோடி விசயத்தில் அது எப்படி தவறாகப் போனது? இது குறித்த ஆராய்ச்சி மற்றும் நேர்காணல்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. அதை படமாக்குவது மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.

இதில் நடிக்கப் போகிறவர்கள் யார் என்பதும் இயக்குநர் உள்ளிட்ட டெக்னீஷியன்களும் இன்னும் முடிவாகவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in