படப்பிடிப்பில் தீ விபத்து: பிரபல நடிகர் காயம்

படப்பிடிப்பில் தீ விபத்து: பிரபல நடிகர் காயம்

படப்பிடிப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரபல மலையாள நடிகர் விஷ்ணு உன்னிகிருஷ்ணன். குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமான அவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். வசனகர்த்தாவுமான இவர், இப்போது ’வெடிகெட்டு’ என்ற படத்தை தனது நண்பரும் ஸ்கிரிப்ட் டைரட்டருமான பிபின் ஜார்ஜுடன் இணைந்து இயக்கி வருகிறார். இவர்கள் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம் இது.

இதற்கு முன் இவர்கள் இணைந்து, அமர் அக்பர் அந்தோணி உட்பட சில படங்களின் கதை, வசனத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். ’வெடிவெட்டு’ படத்தில் ஷூட்டிங் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொச்சி அருகே நடந்து வந்தது.

விஷ்ணு உன்னிகிருஷ்ணன்
விஷ்ணு உன்னிகிருஷ்ணன்

இந்நிலையில் படப்பிடிப்பில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் விஷ்ணு உன்னிகிருஷ்ணனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

‘அவருக்கு பயப்படும்படி ஒன்றுமில்லை. இன்னும் ஐந்து நாட்கள் ஓய்வுக்குப் பின் அவருக்கு படப்பிடிப்பில் கலந்துகொள்வார்’ என்று படத்தின் தயாரிப்பாளர் பாதுஷா தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in